நான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன்… நடிகர் விஷால் கருத்து!

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (15:08 IST)
விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியான நிலையில் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதையடுத்து விஷாலின் அடுத்த படமாக லத்தி என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார்.

ஆனால் இந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை. மேலும் விஷால் தான் இப்போது நடித்துவரும் மார்க் ஆண்டனி படத்தின் ஷூட்டிங்குக்கும் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவரின் உடல்நலப் பிரச்சனைகள்தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஆந்திராவின் கடப்பாவில் உள்ள தர்காவில் அவர் வழிபாடு நடத்தினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் “லத்தி திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும். யாராக இருந்தாலும் ஒருவருக்கு 100 ரூபாய்க்கு செலவு செய்து சேவை செய்தாலே அது அரசியல்தான். அதனால் நான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்