நீண்ட இடைவெளிக்குப் பின் தொடங்கும் விஷாலின் அடுத்த படம்!

vinoth

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (07:49 IST)
தமிழ் சினிமாவின் மிகவும் ‘ஃபிட்டான’ நடிகர்களில் விஷாலும் ஒருவர். ஆனால் சமீபகாலமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகளில் ஈடுபட்டு வந்தார். அவர் நடித்த ‘மத கஜ ராஜா’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் அவர் கைகள் நடுங்கப் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது. இதனால் அவர் உடல்நலம் சம்மந்தமாக பலவிதமானக் கருத்துகள் கிளம்பின.

இதற்கிடையில் அவர் சினிமா கேரியரும் தேக்க நிலையில் இருந்தது. சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ மற்றும் ‘மத கஜ ராஜா’ ஆகிய இரு படங்களைத் தவிர வேறு எந்த படங்களும் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை.  இதனால் அவர் சினிமாவில் ஒரு இடைவெளியை எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில் அவர் ஈட்டி என்ற படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் இன்று முதல் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்