விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேறிய நிலையில், எஞ்சிய 17 போட்டியாளர்களில் இருந்து இந்த வாரம் வெளியேற்றத்துக்கான நாமினேஷன் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமினேட் செய்யப்பட்ட இந்த 8 பேரில் இருந்து, ரசிகர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகள் பெறும் ஒருவர் வார இறுதியில் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்படுவார். இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.