நயன்தாரா நடிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் குவித்தது. ஆனால், 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில், கிட்டத்தட்ட ரூ.100 கோடி செலவில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், படத்தின் டிரைலரை சுந்தர்.சி தயார் செய்து தயாரிப்பாளரிடம் காட்டியதாகவும், அந்த டிரைலரை பார்த்து தயாரிப்பாளர் மிரண்டுவிட்டதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பான தகவல் பரவி வருகிறது.
இருப்பினும், "இப்போது இந்த டிரைலரை வெளியிட வேண்டாம். தீபாவளிக்குப் பின் அல்லது அடுத்த ஆண்டு வெளியிட்டு கொள்ளலாம்" என்று தயாரிப்பாளர் அறிவுறுத்தியதாகவும், சுந்தர்.சி அதைப் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.