இதையடுத்து அவர் ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில வாரங்களாக நடந்து வந்த நிலையில் சமீபத்தில் அதில் ஜூனியர் என் டி ஆர் கலந்துகொண்டார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார். மேலும் டோவினோ தாமஸ் மற்றும் ரிஷப் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது திரைக்கதையை செப்பனிடும் பணியை பிரசாந்த் நீல் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக தன் படங்களின் படப்பிடிப்பு பகுதியளவு முடிந்ததும் பிரசாந்த் நீல் திரைக்கதையை செதுக்குவது வழக்கம்தானாம். அதே போல படத்தின் நாயகன் ஜூனியர் என் டி ஆரும் ஷூட் செல்வதற்கு முன்னால் திரைக்கதையை முழுவதும் முடித்து விடுங்கள் எனக் கூறியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.