தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் ஹரி. அவர் இயக்கிய சாமி, ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றவை. சமீபத்தில் அவர் அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதற்கு அடுத்து ஹரி தற்போது விஷால் ரத்னம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதையடுத்து விஷால் துப்பறிவாளன் 2 படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது விஷாலின் அடுத்த படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பைவ் ஸ்டார் புரொடக்ஷன் சார்பாக கதிரேசன் தயாரிக்க உள்ளார்.
இந்த படத்தை இயக்க உள்ளது யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் இப்போது அந்த படத்தை தயாரிப்பாளர் கதிரேசனே இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. கதிரேசன் ஏற்கனவே லாரன்ஸ், சரத்குமார் நடிப்பில் ருத்ரன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த படம் அட்டர் ப்ளாப் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.