அவரது மறைவு, தமிழக அரசியலுக்கும், சினிமாத்துறைக்கும் பெரும் இழப்பு என்று அரசியல் தலைவர்களும், சினிமாத்துறையினரும் இரங்கல் கூறினர்.
இந்த நிலையில், கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களும், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தினமும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் கூட்டத்தில், தமிழ் திரைப்பட நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.