விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். மேற்கொண்டு படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது லண்டனில் மீண்டும் படப்பிடிப்பு நடத்தலாம் என விஷால் தரப்பு தயாரானது. ஆனால் படத்தில் விஷால் படமாக்கியக் காட்சிகளுக்கும், மிஷ்கினின் காட்சிகளுக்கும் துளிகூட ஓட்டவில்லை என்பதால் படக்குழு அதிர்ச்சியானது. இந்நிலையில் இப்போது போனவரை போகட்டும் என்று அந்த படத்தைக் கைவிட்டுவிட்டு விஷால் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.