ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் யாரும் உயிரிழக்கவில்லை! – செங்கல்பட்டு ஆட்சியர் விளக்கம்!

புதன், 5 மே 2021 (10:10 IST)
செங்கல்பட்டு மருத்துவமனையில் நோயாளிகள் இறந்த விவகாரத்திற்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணம் இல்லை என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 13 பேர் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள செங்கல்பட்டு ஆட்சியர் “செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் யாரும் உயிரிழக்கவில்லை. ஆக்ஸிஜன் விநியோகத்தில் இருந்த கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த 13 பேரில் ஒருவர் மட்டுமே கொரோனா நோயாளி” என்று விளக்கமளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்