யாருக்கு அனுப்புறது? எங்க அனுப்புறது? – தேங்கி கிடக்கும் வெளிநாட்டு கொரோனா நிவாரண பொருட்கள்!

புதன், 5 மே 2021 (09:38 IST)
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட கொரோனா நிவாரண பொருட்கள் விநியோகிக்கப்படாமல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்தியாவில் ஆக்ஸிஜன் மற்றும் மருந்து பொருட்களுக்கு பற்றாக்குறை எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்குள் சுமார் 25 விமானங்களில் ஆக்ஸிஜன், மருந்து பொருட்கள் உள்ளிட்ட பல கொரோனா நிவாரண உதவிகள் இந்தியாவை வந்தடைந்துள்ளன. ஆனால் அவற்றை இன்னும் விநியோகிக்காமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிற நாடுகளில் இருந்துமத்திய அரசுக்கு, மாநில அரசுக்கு, தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு என பல்வேறு வகைகளில் நிவாரண பொருட்கள் வந்துள்ளதால் அவற்றை அங்கீகரிப்பது மற்றும் உரிய இடத்திற்கு அனுப்புவது குறித்த பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் நிவாரண பொருட்கள் விநியோகம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்