மார்க் ஆண்டனி படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்!

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (14:07 IST)
விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’.  இந்த படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் செப்டமபர் 15 ஆம் தேதி  சோலாவாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை மற்றும் ஆடியோ ரிலீஸ் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த படத்தின் டிரைலரில் அனைவரையும் கவர்ந்த அம்சமாக டிரைலரின் ஒரு காட்சியில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா தோன்றியது அமைந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தற்போது வெளியாகியுள்ளது. படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் ஓடும் நேரம் 2 மணிநேரம் 31 நிமிடங்களாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்