விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கி நடந்து வருகிறது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மார்க் ஆண்டனி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் விஷால். இந்த படத்தை விஷாலின் எனிமி படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோஸ் வினோத்குமாரே தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். கதாநாயகியாக ரீத்து வர்மா நடிக்கிறார். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
கடந்த மே மாதம் படத்தின் பூஜை நடந்தது. இதில் படத்தின் நாயகன் விஷால், மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதுவரை 40 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் விஷால் ஆகிய இருவரும் அப்பா மகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இருவருக்கும் 5 கெட்டப்புகள் படத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.