மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Siva

ஞாயிறு, 4 மே 2025 (07:44 IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ படத்தின் படப்பிடிப்பு சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய போஸ்டரும் வெளியாகி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
 
பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், கலையரசன், பசுபதி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் காட்சியளிக்கின்றனர்.
 
நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்க, எழிலரசு ஒளிப்பதிவு மற்றும் சக்தி திரு படத்தொகுப்பு ஆகியவர்கள் முக்கிய பங்காற்றி இப்படத்தை உருவாக்குகின்றனர். இப்படம், வரும் அக்டோபர் 17-ஆம் தேதி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதன் மூலம், படத்திற்கு பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
துருவ் விக்ரம், 2022-ஆம் ஆண்டில் வெளியான ‘மகான்’ தனது தந்தை விக்ரமுடன் நடித்திருந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது அடுத்த படம் ‘பைசன் காளமாடன்’ வெளியாக உள்ளது.  
 
 
Edited by Siva
 

LOVE U NA ❤️ @beemji https://t.co/AHl2XpG54m

— Mari Selvaraj (@mari_selvaraj) May 3, 2025

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்