ஐயோ கடவுளே.... இது வெறும் வதந்தியா இருக்கக்கூடாதா..? - நடிகை விசாகா சிங்!

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (12:18 IST)
'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் சேதுராமன். சந்தானம் மற்றும் பவர் ஸ்டாருடன் சேர்ந்து நடித்திருந்த அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தொடர்ந்து     'வாலிப ராஜா', 'சக்க போடு போடு ராஜா' மற்றும் '50/50' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

இவர் நடிகராக மட்டுமின்றி எம்.பி.பி.எஸ், எம்.டி படித்த தோல் மருத்துவ நிபுணராகவும் இருந்து வந்தார். பல்வேறு தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களில் மருத்துவ ஆலோசனைகளை கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 8:30 மணியளவில் மாரடைப்புக் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். வயது 37 வயதாகும் இவரது மரண செய்தி கேட்டு திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை விசாகா சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் " இது வெறும் வதந்தியான தகவலாக இருக்கக்கூடாதா... RIP சேது... கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் இருந்து பல memories... இதை எழுதுவதில் எனக்கு பேரதிர்ச்சியாகவும், மிகுந்த வருத்தமாகவும் உள்ளது. இந்த துயரத்தை சமாளிக்க கூடிய வலிமையை கடவுள்  உங்கள் குடும்பத்தாருக்கு கொடுக்கட்டும் என மிகுந்த வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்