ஜூலி பதிவிட்ட புகைப்படத்தை கண்டு செம்ம கடுப்பான ட்விட்டர் வாசிகள்...!
கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு பேரில் நாட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகின்றனர். இந்த நேரத்தில் வீட்டில் இருப்பது போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.
அந்தவகையில் தற்போது பிக்பாஸ் பிரபலம் ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு மக்களை எங்கேஜாக வைத்திருக்கிறேன். வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் த்ரோபேக் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் எந்த நேரத்துல எதை செய்யுறதுன்னே உனக்கு? நீயும் ஒரு நர்ஸ் தானா? கொஞ்சம் கூட அறிவு இல்லையா இந்த ரணகளத்திலும் ஒரு குதூகலம் கேட்குதா உனக்கு! என ஆளாளுக்கு திட்டி தீர்த்து வருகின்றனர். இதே ஒரு நடிகை பதிவிட்ட இப்படி கேட்பார்களா...? ஜூலி என்றால் எப்போதும் கிண்டல் தான்...என்றும் சிலர் கூறுகின்றனர்.
Posting pics to keep people engaged. Stay home stay safe. Throwback