மறைந்த நடிகரின் உருவத்தை நெஞ்சில் பச்சைக் குத்திக்கொண்ட விஷால்… வைரல் புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (13:57 IST)
விஷால் நடித்த லத்தி திரைப்படம் டிசம்பர் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ஆனால் பெரியளவில் நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்றது.

விஷாலின் சமீபத்தைய படமாக லத்தி என்ற படம் டிசம்பரில் ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ஈட்டவில்லை. தொடர்ந்து விஷால் படங்கள் திரையரங்குகளில் படுதோல்வி அடைந்து வருகின்றன. ஆனால் இந்தி டப்பிங் மற்றும் சாட்டிலைட் உரிமை ஆகியவற்றின் மூலமாக தப்பித்து விடுகின்றன.

இந்நிலையில் இப்போது விஷால் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டவர்களும் நடிக்கின்றனர். இந்நிலையில் விஷால் தற்போது தன்னுடைய நெஞ்சில் மறைந்த நடிகர் மற்றும் முன்னாள் முதல்வர் எம் ஜி ஆரின் உருவத்தை தன்னுடைய நெஞ்சில் பச்சைக் குத்திக்கொண்டுள்ளார்.

மார்க் ஆண்டனி படத்துக்காக அவர் போலியான டாட்டூவை பதித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்