விமல் அடுத்த படத்தில் நாயகியான பிரபல நடிகை!

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (22:03 IST)
விமல் நடிக்கும் படம் ஒன்றின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் நாயகியாக பிரபல நடிகை இணைந்துள்ளார் 
 
குட்டிப்புலி சரவண சக்தி என்பவர் இயக்கியிருக்கும் புதிய படத்தில் விமல் நாயகனாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் நாயகியாக நடிக்க தன்யா ஹோப் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் ஏற்கனவே தாராள பிரபு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது 
 
இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று நடந்த நிலையில் சென்னை மதுரை ஆகிய இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக இருப்பதாகவும் இந்த படம் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தி வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்