களவாணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விமல் அதன் பின்னர் பல படங்களில் நடித்து தன்னை ஒரு திறமையான நடிகராக அடையாளம் காட்டிக்கொண்டார். ஆனால் கிராமத்து வேடம் பொருந்திய அளவுக்கு அவருக்கு நகரத்து இளைஞர் வேடம் பொருந்தவில்லை. அதுபோல அவர் நடித்த சில படங்கள் தோல்வியை தழுவியது. பின்னர் சொந்தப்படம் தயாரித்து கையை சுட்டுக்கொண்டார்.