‘எம்புரான்’ மலையாள சினிமாவில் புதிய சாதனைப் படைக்கும்… விக்ரம் உறுதி!

vinoth

புதன், 26 மார்ச் 2025 (08:06 IST)
விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு தங்கலான் திரைப்படம் நல்ல கவனத்தைப் பெற்றது. அதையடுத்து இப்போது சித்தா படத்தின் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் துஷாரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்ததை அடுத்து தற்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகும் எனவும் பின்னர் முதல் பாகம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து  வருகின்றன. படம் மார்ச் 27 ஆம் தேதி நாளை ரிலீஸாகிறது.

இந்நிலையில் கேரளாவில் இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளுக்காக சென்றுள்ள விக்ரம் இதே நாளில் ரிலீஸாகும் மலையாள சினிமாவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான எம்புரான் குறித்து பேசியுள்ளார். அதில் “மலையாள சினிமாவில் இருந்து பேன் இந்திய அளவில் சாதனை படைக்கப் போகும் படமாக நான் எம்புரானைப் பார்க்கிறேன். அந்த படத்தோடு என்னுடைய ‘வீர தீர சூரன்’ படமும் ரிலீஸாவது மகிழ்ச்சி. என் மனைவியே முதல் நாளில் எம்புரான் படம் பார்ப்பாரா இல்லை என்னுடைய ‘வீர தீர சூரன்’ படத்தைப் பார்ப்பாரா எனத் தெரியவில்லை.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்