மாதம்பட்டி ரங்கராஜ் கருவை கலைக்க சொல்லி என்னை அடித்தார்: ஜாய் கிரிசில்டா புகார்

Siva

வெள்ளி, 29 ஆகஸ்ட் 2025 (16:05 IST)
திரைப்பட சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக கூறி, ஜோய் கிரிசில்டா எ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
 
செய்தியாளர்களிடம் பேசிய ஜோய் கிரிசில்டா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்குத் திருமணம் நடந்ததாகவும் அதன் பிறகு இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஒன்றரை மாதங்களாக ரங்கராஜ் தன்னுடன் பேசுவதைத் தவிர்த்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
 
ஒரு வாரத்திற்கு முன்பு ரங்கராஜைச் சந்தித்தபோது, தன்னை அடித்ததாகவும் தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ் தான் அப்பா என்றும், குழந்தையை கலைக்க சொல்லி தன்னை அடித்ததாகவும், குழந்தைக்கு நீதி கேட்டு போராடுவதாகவும் அவர் கூறினார்.
 
ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியிடம் இருந்து நீதிமன்ற ரீதியாக பிரிந்துவிட்டதாக கூறினாலும், ரங்கராஜ் அண்மையில் ஒரு நிகழ்ச்சிக்கு தனது மனைவி ஸ்ருதியுடன் வந்திருந்த வீடியோ வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்