விஜய்யின் ஜனநாயகன் பொங்கல் ரிலீசா? இதற்கு முன் எத்தனை படங்கள் பொங்கலில் ரிலீஸ்?

Siva

திங்கள், 24 மார்ச் 2025 (16:54 IST)
தளபதி விஜய் நடிக்கும் "ஜனநாயகன்" திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது. அனேகமாக அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த படம் திரையரங்குகளில் எதிர்பார்க்கப்படுவதால், விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.
 
முன்னதாக, தளபதி விஜயின் 14 படங்கள் பொங்கல் பண்டிகை வெளியீடாக ரிலீஸாகி பெரும்பாலும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. விஜயின் முதல் பொங்கல் வெளியீடாக "கோயம்புத்தூர் மாப்பிள்ளை" திரைப்படம் வந்த நிலையில், அதனை தொடர்ந்து வந்த பொங்கல் ரிலீஸ் படங்களின் பட்டியல் இதோ:
 
தளபதி விஜயின் பொங்கல் வெளியீடு பெற்ற திரைப்படங்கள் வரிசையாக:  
 
1. கோயம்புத்தூர் மாப்பிள்ளை 
2. காலமெல்லாம் காத்திருப்பேன் 
3. கண்ணுக்குள் நிலவு 
4. பிரண்ட்ஸ் 
5. திருப்பாச்சி 
6. ஆதி 
7. போக்கிரி 
8. வில்லு 
9. காவலன் 
10. நண்பன் 
11. ஜில்லா 
12. பைரவா 
13. மாஸ்டர் 
14.  வாரிசு 
 
 
மேற்கண்ட பட்டியலில் சில திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெறவில்லை என்றாலும், மொத்தத்தில் பொங்கல் விஜய்க்கு வெற்றிநாளாகவே இருந்து வருகிறது. இந்த சூழலில், "ஜனநாயகன்" விஜயின் 15வது பொங்கல் ரிலீஸ் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்