ஹார்ட் டிஸ்க்கை பெப்சி யூனியன் தர மறுக்கிறார்கள்: நடிகை சோனா திடீர் தர்ணா போராட்டம்..!

Siva

திங்கள், 24 மார்ச் 2025 (14:00 IST)
நடிகை சோனா தயாரித்த வெப் தொடரின் ஹார்ட் டிஸ்கை வாங்கி வைத்துக் கொண்டு, பெப்சி யூனியன் தர மறுக்கிறது என்று கூறி திடீரென அவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை சோனா, ஸ்மோக் என்ற வெப் சீரிஸ் தயாரித்த நிலையில், அந்த வெப் சீரிஸின் ஹார்ட் டிஸ்க் பெப்சி யூனியன் இடம் சிக்கிக்கொண்டதாக கூறியுள்ளார். லைட்டிங் யூனியனில் சேர்ந்தவர்கள், பணம் தர வேண்டும் என்பதற்காக   தன்னுடைய மேனேஜரிடம் இருந்து ஹார்ட் டிஸ்க்கை மிரட்டி வாங்கி வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், தான் அனைவருக்கும் பணம் செட்டில் செய்து விட்ட பிறகும், மேலும் ஒரு லட்சம் ரூபாய் கேட்டு ஹார்ட் டிஸ்க் தர மறுக்கிறார்கள் என்றும் அவர் செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

"இந்த ஹார்ட் விஷயத்தில் என்ன நடக்கிறது எனக்கு தெரியவில்லை. தற்போது ஹார்ட் டிஸ்க் யாரிடம் இருக்கிறது என்பதும் தெரியவில்லை. எந்த விதமான நடவடிக்கையும் பெப்சி யூனியன் எடுக்கவில்லை. எனவே, எனக்கு என்னுடைய ஹார்ட் டிஸ்க்  வேண்டும், என்னுடைய பணம் வேண்டும்" என்று கூறி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த போராட்டத்தை அடுத்து, அவருக்கு ஹார்ட் டிஸ்க் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்