LIK இல்லைனா Dude..? ஒரு படம்தான் தீபாவளிக்கு ரிலீஸ்! - உஷாரான ப்ரதீப் ரங்கநாதன்!

Prasanth K

வெள்ளி, 29 ஆகஸ்ட் 2025 (11:13 IST)

இளம் நடிகர் ப்ரதீப் ரங்கநாதனின் இரண்டு படங்கள் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிப்பு வெளியான நிலையில் ஒரு படம்தான் வெளியாகும் என அவர் கூறியுள்ளார்.

 

தமிழில் ஜெயம் ரவியை வைத்து கோமாளி படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர் ப்ரதீப் ரங்கநாதன். அதை தொடர்ந்து லவ் டுடே படத்தை அவரே இயக்கி நடித்து ஹிட் ஆன நிலையில், அடுத்து அவர் நடித்த ‘ட்ராகன்’ படமும் ஹிட் அடித்தது.

 

அதை தொடர்ந்து கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் Dude, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK என படங்கள் வரிசைக்கட்டி தயாராக இருக்கின்றன. இந்நிலையில் LIK, Dude இரு படங்களுமே தீபாவளிக்கு ரிலீஸை அறிவித்திருந்தன. முன்னதாக ப்ரதீப் ரங்கநாதன் நடித்த ட்ராகன் படம் 100 கோடி வசூலை கடந்திருந்தது. அதன்மூலம் நடித்த இரண்டாவது படத்திலேயே 100 கோடி கலெக்‌ஷனை தாண்டிய ஹீரோவாக உள்ளார் ப்ரதீப்,

 

இந்நிலையில் அடுத்தப்படம் அதை விட அதிகமாக கலெக்‌ஷன் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இரண்டு படமும் ஒரே நேரத்தில் வெளியானால் அது இரண்டு படங்களின் கலெக்‌ஷனையுமே பாதிக்கும் என்பதால் இரண்டில் ஒன்றை வேறு தேதிக்கு மாற்ற ப்ரதீப் முயற்சித்து வருகிறார், இதை ஒரு மேடையிலும் அவர் உறுதியாக தீபாவளிக்கு ஒரு படம்தான் ரிலீஸ் ஆகும் என கூறியிருக்கிறார். விக்னேஷ் சிவன் சீனியர் என்பதால் அவருக்கு முன்னுரிமை கொடுத்து LIK முதலில் ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்