சமீபத்தில் சாய் தன்ஷிகாவை காதலிப்பதாக கூறியிருந்த விஷால் திருமணம் குறித்து எதுவும் அறிவிக்காமல் இருந்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகர் சங்க பொதுச்செயலாளரான விஷால், நடிகர் சங்க கட்டிடத்தைக் கட்டிய பிறகுதான் தனக்கு திருமணம் என்று ஆரம்பம் முதலே கூறி வந்தார். இடையே பல நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினாலும், இறுதியாக தானும் சாய் தன்ஷிகாவும் காதலிப்பதாக அறிவித்தார் விஷால்.
மேலும் ஆகஸ்டு 29ம் தேதி தனது பிறந்தநாளன்று தங்கள் திருமணத்தையும் நடத்த உள்ளதாக அவர் கூறியிருந்தார். ஆனால் அதன்பின்னர் அதுகுறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அவர் சொன்னபடி இன்று அவரது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் திருமணத்திற்கான எந்த வித செய்திகளும் வெளியாகவில்லை.
இதனால் அவர்களது காதல் விவகாரத்தில் ஏதேனும் பிரச்சினையா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. ஆனால் விஷால் சொன்ன சொல் தவறாதவர். நடிகர் சங்க கட்டிட பணிகள் முடிந்ததும் திருமணம் என்ற முடிவில் அவர் இருக்கிறார். தற்போது சங்க கட்டிட பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் செப்டம்பர் அல்லது அக்டோபரில் கட்டிடம் திறக்கப்பட உள்ளது. அதற்கு பிறகு விஷால் திருமணத்தை அறிவிப்பார் என்று சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.
Edit by Prasanth.K