இந்த நிலையில், இப்படம் திரைக்கு வர இன்னும் 75 நாட்கள் உள்ளதை அறிவிக்கும் புதிய போஸ்டரை படக்குழுவினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இந்த போஸ்டரை பகிர்ந்த நிலையில், அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாயகன் படத்திற்கு பிறகு, மணிரத்னமும் கமல்ஹாசனும் இணையும் படம் என்பதால், தக்லைஃப் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முன்னதாக, இப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சரியாக 75 நாள்களில் படம் திரைக்கு வரும் என உறுதிப்படுத்தும் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.