கைதியில் இறந்த அர்ஜுன் தாஸ் எப்படி விக்ரம் படத்தில்… இயக்குனர் லோகேஷ் விளக்கம்!

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (09:07 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை கமல் படங்கள் செய்யாத வசூல் சாதனையைப் படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கிட்டதட்ட கைதி 2 என்று சொல்லுமளவுக்கே கைதி படத்துக்கும் விக்ரம் படத்துக்கும் அதிகளவில் ஒற்றுமைகள் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் கைதி படத்திலேயே கொலை செய்யப்பட்டு விட்ட அர்ஜுன் தாஸ் விக்ரம் படத்தில் அதே பாத்திரமாகவே வருகிறார். அது மட்டுமில்லாமல் அவர் டில்லி சம்மந்தமான வசனங்களையும் பேசுகிறார். இது எப்படி சாத்தியம் என ரசிகர்களுக்கு கேள்விகள் எழுந்தன.

இதுபற்றி தற்போது டிவிட்டரில் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார். அதில் “ கைதி படத்தில் அர்ஜுன் தாஸ் கொல்லப்படவில்லை. நெப்போலியன் கதாபாத்திரத்தால் அடித்து தாடைகள் நொறுங்கின. அதற்காகதான் விக்ரம் படத்தில் அர்ஜுன் தாஸ் கதாபாத்திரத்துக்கு தையல் தழும்புகள் போடப்பட்டன. மேலும் இது சம்மந்தமான விளக்கம் கைதி 2 திரைப்படத்தில்…” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்