விக்ரமின் ‘மஹான்’ டிரைலர் ரிலீஸ் நேரம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (10:06 IST)
விக்ரம் நடித்த ‘மஹான்’ திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் ஓடிடியில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன 
 
இந்த நிலையில் ‘மஹான்’ திரைப்படத்தின் டிரைலர் இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது டுவிட்டர் தளத்தில் சற்றுமுன் அறிவித்துள்ளார்
 
மேலும் ‘மஹான்’ திரைப்படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ள இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
விக்ரம், துருவ் விக்ரம், வாணிபோஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்