‘துருவ நட்சத்திரம்’ படத்தை முடிக்க ஒப்புக்கொண்ட விக்ரம்!

திங்கள், 31 ஜனவரி 2022 (18:28 IST)
‘துருவ நட்சத்திரம்’ படத்தை முடிக்க ஒப்புக்கொண்ட விக்ரம்!
விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில் இந்த படத்தை முடிக்க விக்ரம் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்பட்டது
 
மேலும் இந்த படத்தின் டப்பிங் பேசவும் வரமுடியாது என விக்ரம் கூறியதாகவும் செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் இந்த படத்தை முடித்துக் கொடுக்கவும் இந்த படத்தின் டப்பிங் பணியை பேசவும் விக்ரம் ஒப்புக்கொண்டதாகவும் இதற்காக மூன்று நாள் அவர் ஒதுக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
இதனை அடுத்து நீண்டகாலமாக கிடப்பில் இருக்கும் துருவநட்சத்திரம் திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி விடும் என்று கூறப்படுவதால் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே விக்ரம் நடித்த மஹான் திரைப்படம் வரும் பத்தாம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படமும் இன்னும் ஓரிரு மாதங்களில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்