வலிமை இந்தி மற்றும் தெலுங்கு டிரைலர் அப்டேட்!

திங்கள், 31 ஜனவரி 2022 (10:10 IST)
வலிமை படத்தை ஒரே நேரத்தில் இந்தி மற்றும் தெலுங்கில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் போனி கபூர் முடிவு செய்திருந்தார்.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருந்த வலிமை திரைப்படம் கொரோனா கட்டுப்பாடுகளால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலைமை சரியானதும் படத்தை மூன்று மொழிகளில் வெளியிட படக்குழு தயாராக உள்ளது. இந்நிலையில் வலிமை எப்போது ரிலிஸ் ஆகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தன. இதுபற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் 100 சதவீத இருக்கைகள் அனுமதிக்காக காத்திருக்கப் போவதில்லையாம். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இரவுக் காட்சிகள் அனுமதி அளிக்கப்பட்டதும் ரிலீஸ் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வலிமை படத்தின் இந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷனும் ஒரே நாளில் ரிலீஸூக்கு தயாராகியுள்ளன. இதையடுத்து அந்தந்த மொழிகளில் படத்தை விளம்பரப்படுத்த இரு மொழிகளின் டிரைலரும் விரைவில் வெளியாக உள்ளதாம். இதற்காக இரு மொழிகளிலும் டிரைலர் தயாராக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்