ரசிகர்களின் அன்புமழையால் ஆனந்தக்கண்ணீர் விட்ட சீயான் விக்ரம்!

Webdunia
வெள்ளி, 22 நவம்பர் 2019 (21:19 IST)
சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த முதல் படமான ’ஆதித்ய வர்மா’ திரைப்படம் இன்று வெளியானது. முதல் காட்சி முடிந்தவுடன் இந்த படத்திற்கு சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதுமட்டுமின்றி இந்த படத்தை பார்த்த பெரும்பாலானவர்கள் துருவ் விக்ரமின் நடிப்புக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். முதல் படத்திலேயே துருவ் சக்சஸ் ஆகி விட்டார் என்றும் அவரது நடிப்பு ஒரு அனுபவம் உள்ள நடிகரின் நடிப்புக்கு இணையாக இருந்ததாகவும் ரசிகர்கள், விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலான ஊடகங்கள் இந்த படத்திற்கு நல்ல ரேட்டிங் கொடுத்துள்ளதால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்றும் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் காதலர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இன்று முதல் நாள் முதல் காட்சியை பார்க்க சென்னை காசி தியேட்டரில் விக்ரமும் அவரது மகன் துருவ் விக்ரம் வந்திருந்தனர். இந்த படத்தை பார்த்து முடித்த உடன் வெளியே அவர்கள் இருவரும் வந்தபோது ரசிகர்கள் இருவருக்கும் கைகொடுத்து பாராட்டும் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு மிகச்சிறப்பாக இருந்ததாக அவர்கள் தெரிவித்த பாராட்டால் விக்ரம் ஆனந்த கண்ணீரால் உணர்ச்சிவசப்பட்ட காட்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
 
ஆதித்ய வர்மா வெற்றியை அடுத்து துருவுக்கு அடுத்தடுத்து  படங்கள் குவிய வாய்ப்பு இருப்பதாகவும், தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் திரைப்பட விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்