கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்று மொழி தெரியாத ரசிகர்களாலும் வெகுவாக ரசிக்கப்பட்ட படம் அர்ஜுன் ரெட்டி. பின்னர் இதே படம் இந்தியில் நடிகர் ஷாஹித் கபூர் நடிப்பில் கடந்த ஜூன் 21ம் தேதி வெளிவந்த படம் கபீர் சிங். எதிர்பார்த்தது போன்றே அர்ஜுன் ரெட்டி ஈடாக அந்த படமும் வெற்றி அடைந்தது. இந்நிலையில் தற்போது தமிழ் ரீமேக்காக நடிகர் துருவ விக்ரம நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ஆதித்ய வர்மா. கிரீஷையா இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என பார்ப்போம்.