விஜய்யின் 'லியோ' பட புதிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லியோ'.
இப்படத்தை லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 39 நிமிடங்கள் ஓடும் என தகவல் வெளியானது.
இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடக்க இருந்த நிலையில் திடீரென்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சமீபத்தில் படத்தில் செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றது.
இந்நிலையில் இப்போது படத்தின் சென்சார் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், லியோ படத்தின் டிரைலர் அக்டோபர் 5 ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகலாம் என கூறப்படும் நிலையில், லியோ பட புதிய அப்டேட் இன்று மாலை மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.