விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்த கேரளா ரசிகர்கள்!

Sinoj
திங்கள், 18 மார்ச் 2024 (20:01 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம்  தி கோட். இப்பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
 
தி கோட் படக்குழு கேரளாவுக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி,  கேரளாவில் உள்ள சோட்டானிக்கரை கோயிலுக்கு  நடிகர் பிரபுதேவா சென்று சாமி கும்பிட்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
ஆனால் தி கோட் பட ஷூட்டிங் அங்கு நடைபெறவில்லை எனவும், கேரளாவில் உள்ள பிரபல கிரீன் ஃபீல்ட் இன்டர்நேசனல் ஸ்டேடியத்தில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இலங்கைக்கு சென்று சில  காட்சிகள் ஷூட்டிங் செய்ய படக்குழு திட்டமிட்ட நிலையில், இலங்கைக்குப் பதிலாக, கேரளாவில் ஷூட்டிங் நடப்பதாக தகவல் வெளியாகிறது.
 
ஏற்கனவே தி கோட் படக்குழு      கேரளாவுக்குச் சென்ற நிலையில், விஜய் இன்று கேரளாவுக்கு சென்றார். திருவனந்தபுரம் விமான நிலையம் சென்ற அவரை சாலையின் இருபுறமும் கேரளா ரசிகர்கள் சூழ்ந்து ஊற்சாகமாக வரவேற்றனர்.
 
காவலன் பட ஷூட்டிங்கின் போது விஜய திருவனந்தரபுரம் சென்றிருந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கேரளாவுக்குச் சென்றுள்ளார். இதனால் அவரை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்