மகள்களுடன் மகிழ்ச்சியாக நடிகர் விஜயகுமார்... வனிதா அக்கா தான் பாவம்!

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2023 (20:41 IST)
தமிழ் சினிமாவின் பெயர்போன நட்சத்திர குடும்பங்களில் ஒன்று விஜயகுமாரின் குடும்பம். பழமைவாய்ந்த மிகச்சிறந்த நடிகரான விஜயகுமாருக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீ தேவி என்ற மூன்று மகள்கள் உள்ளனர். அவரது குடும்பத்தில் உள்ள ஒரே மகன் அருண் விஜய்.
 
இதில் வனிதாவை தவிர மற்ற மகள்கள் அனைவரும் அப்பா விஜயகுமார் மீது பாசமாக இருப்பார்கள். வனிதாவும் பழைய பிரச்சனைகளையெல்லாம் மறந்துவிட்டு மீண்டும் மகிழிச்சியாக இருப்போம் என அப்பா விஜயகுமார் மற்றும் அண்ணன் அருண் விஜய்யிடம் எவ்வளவோ பேசியும் அவர்கள் வனிதாவை குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ளவே இல்லை. மற்ற பிள்ளைகள் விஜயகுமாரிடம் எப்போதும் பாசத்துடன் இருப்பார்கள். 
 
தற்போது அதை வெளிப்படுத்தும் வகையில் தற்போது மகள் ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவியுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். பாவம் வனிதா அக்காவையும் கொஞ்சம் ஏத்துக்கோங்க என நெட்டிசன்ஸ் கூறியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்