"மாஸ்டர்" இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொல்லப்போகும் "குட்டிக்கதை" இது தான்...?

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (13:27 IST)
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு வேகமெடுத்து விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். மேலும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். 
 
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். காரணம், பெரும்பாலும் விஜய் தான் நடித்துள்ள படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் குட்டி கதை சொல்வது வழக்கம். அந்த கதை கேட்டகவே அத்தனை பேரும்  ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். 
 
இந்நிலையில் தற்போது இயக்குநர் ரத்ன குமார்  ”மாஸ்டர் ஆடியோ வெளியீட்டிற்காக காத்திருப்பதாக” கூறி ட்விட் போட்டுள்ளார். விஜய் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு அவரது ரசிகர்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்திய நிலையில் இவரது இந்த ட்விட் அதனை மீட்கும் விதமாக அமைந்துள்ளது. எனவே மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய், ஐடி ரெய்டு குறித்து குட்டி கதை சொல்லி அனைவரையும் நோஸ்கட் செய்வார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். அது அப்படியே நடக்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்