பிக்பாஸ் 4ல் விஜய் டிவி ரக்‌ஷன்? அவரே கூறிவிட்டார்!

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (14:05 IST)
பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியின் 3 சீசன்கள் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இது குறித்த முதல் புரோமோவை நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதை அடுத்து பிக்பாஸ் நான்காவது சீசன் உறுதி செய்யப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சி செப்டம்பர் 27 அலல்து அக்டோபர் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று போட்டியாளர்களை அறிமுகம் செய்து முதல் நாள் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. இந்த சீசனில் ரம்யா பாண்டியன், புகழ், ஷில்பா மஞ்சுநாத், சூர்யா தேவி, எலிசபெத் ஹெலன் , பூனம் பாஜ்வா , கிரண் ரதோட், ஷாலு ஷம்மு உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்ப்போது விஜய் டிவி யின் தொகுப்பாளரான ரக்ஷன் போட்டியாளராக பங்கேற்கவுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். ஆம் ரசிகர்கள் ரக்ஷனிடம் உங்களை இப்போதெல்லாம் விஜய் டிவியில் பார்க்கமுடியவில்லையே என கேட்டதற்கு "விரைவில் ஸ்பெஷலான ஷோ ஒன்றில் வருகிறேன்" என்று பதிலளித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதை மறைமுகமாக கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்