துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கட் அட்லூரி இயக்கத்தில் வெளியான 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் கடந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகலாம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.
ஆனால், வெங்கட் அட்லூரி தரப்பில் விசாரித்தபோது, 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றாலும், அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் எண்ணம் இப்போதைக்கு இயக்குநருக்கு இல்லை என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து வெளியான தகவல்கள் தவறானவை என்றும் அவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
ஒருவேளை இரண்டாம் பாகம் எடுப்பதாக இருந்தாலும், இப்போதைக்கு இல்லை என்றும், வெங்கட் அட்லூரி சூர்யா படத்தை முடித்தவுடன் அடுத்தடுத்து சில படங்களில் ஒப்பந்தமாக உள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆகவே, 'லக்கி பாஸ்கர்' என்ற மாபெரும் வெற்றி படத்தின் இரண்டாம் பாகம் இப்போதைக்கு வர வாய்ப்பில்லை என்று தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் கூறி வருகின்றன. இருப்பினும், சமூக வலைத்தளங்களில் கூறப்படுவது போல் 'லக்கி பாஸ்கர் 2' உருவாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.