அனிருத்தின் சம்பளம் 12 கோடி ரூபாய்.. அடித்து விடும் யூடியூபர்கள்.. உண்மை என்ன?

Siva

திங்கள், 7 ஜூலை 2025 (17:43 IST)
ஒரு திரைப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர் ஆகியோரின் சம்பளம் என்பது சம்பந்தப்பட்டவருக்கும் தயாரிப்பாளருக்கும் மட்டுமே தெரிந்த ஒரு விஷயம். ஆனால், 'சினிமா டிராக்கர்கள்'  என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் பலர் தங்கள் இஷ்டம்போல் கற்பனை குதிரைகளைத் தட்டிவிட்டு  நட்சத்திரங்களின் சம்பளம் குறித்த வதந்திகளை பரப்பி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தான், தற்போது இசையமைப்பாளர் அனிருத்தின் சம்பளம் ரூ.12 கோடி என்றும் சொல்லப்பட்டு வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகும் 'கிங்டம்', ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'கூலி', மற்றும் யாஷ் நடித்து வரும் 'டாக்சிக்' உள்ளிட்ட படங்களுக்கு அனிருத் ரூ.12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக யூடியூப் சேனல் ஒன்று தெரிவித்துள்ளது.
 
ஆனால், இது முழுக்க முழுக்க கற்பனை என்றும், அனிருத் கடந்த சில வருடங்களாக ஒரே சம்பளத்தைத்தான் வாங்கி வருகிறார் என்றும், அவரது சம்பளம் ரூ.12 கோடி என்பது முற்றிலும் வதந்தியான ஒரு தகவல் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றன.
 
இதுபோன்ற போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் மட்டுமே வாழ்ந்து வரும் சிலருக்கு இது ஒரு சம்மட்டி அடியாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்