அடுத்த படமும் ரெடி: கேக் வெட்டி கொண்டாடிய விஜய்சேதுபதி!

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (19:21 IST)
அடுத்த படமும் ரெடி: கேக் வெட்டி கொண்டாடிய விஜய்சேதுபதி!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் உள்பட 6 திரைப்படங்கள் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் திரையரங்குகள் திறந்து விட்டதால் அடுத்தடுத்து அவருடைய படங்கள் ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்து வந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது 
 
இதனை அடுத்து விஜய் சேதுபதி உள்பட படக்குழுவினர் அனைவரும் கேக் வேட்டி படப்பிடிப்பு முடிவடைந்ததை கொண்டாடினார். இன்னும் ஒரு சில மாதங்களில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளை முடித்து வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இந்த படத்தை திரையிட முடிவு செய்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
 
விஜய் சேதுபதி ஜோடியாக மேகாஆகாஷ் நடிக்கும் இந்த படத்தில் இயக்குனர்கள் மோகன் ராஜா மற்றும் மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்