தியேட்டரிலும் மாஸ்டர் டீசர்: இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக வெளிவந்த அறிவிப்பை அடுத்து நேற்றும் இன்றும் டுவிட்டரில் இதுகுறித்து ஹேஷ்டேக் டிரண்டாகி வருகின்றன என்பது தெரிந்ததே
இந்த நிலையில் மற்றுமொரு இன்ப அதிர்ச்சியாக நாளை மாலை 6.30 மணிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களின் உற்சாகத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நாளை ஒரு சில படங்கள் மட்டுமே வெளியாக இருக்கும் நிலையில் திரையரங்குகளில் கூட்டம் கூடுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் மாஸ்டர் படத்தின் டீசரை பார்ப்பதற்காக நாளை மாலை திரையரங்குகளில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது