மிரட்டலான விஜய் சேதுபதியின் சீதக்காதி ட்ரைலர் ரிலீஸ்

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (11:53 IST)
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று காலை 11 மணிக்கு இணையத்தில் வெளியானது.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாலாஜி தரணிதரன். தற்போது, மீண்டும் விஜய் சேதுபதி ,  பாலாஜி தரணீதரன் கூட்டணி அமைத்துள்ள படம் ‘சீதக்காதி’.
 
சீதக்காதி படம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் கேரியரில் 25-வது படம். இதில் இயக்குநர் மகேந்திரன், நடிகைகள் பார்வதி, ரம்யா நம்பீசன், காயத்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதனை ‘பேஷன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.
 
சீதக்காதி டிரெய்லர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர். 
 
அதனை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள சீதக்காதி டிரெய்லரை ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.
 
இதில் இயக்குனர் ராம் பேசியிருக்கும் ஒரு வசனம் பார்ப்போரை சிந்திக்க வைத்துள்ளது, 'மனிதர்களை கொலை செய்வது மட்டுமில்லை கொலை உணர்ச்சியை கொலை செய்தாலும் கொலை தான்".
 
மேலும் இந்த ட்ரைலரின் இறுதியில் விஜய் சேதுபதி பேசியிருக்கும், “ஆடி ஓய்ந்திருக்கும் கிழவன் நான்… நானே சரித்திரமாக மாறிவிட்டேன்…” என்ற ஒற்றை வசனம் அனைவரின் கவனத்தையும் இழுத்துள்ளது.

 
https://www.youtube.com/watch?time_continue=7&v=GDyg4qxeX68
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்