இதைத் தொடர்ந்து ரூ. 25 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்குவதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ''கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவதுமாக மின்சாரம் கிடைக்க பத்து நாட்கள் ஆகும் என்பதால், அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் ''சார்ஜிங் டார்ச் லைட்'' ஆயிரக்கணக்கில் வழங்கப்படும். லட்சக்கணக்கான மரங்கள் அழிந்து நாசமாகிவிட்டதால், அதற்கு முன்னுரிமை கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் தோப்புகளை முழுவதுமாக புனரமைத்து தரப்படும்.
அவர்கள தங்களது பிள்ளைகள் போல வளர்த்து வந்த தென்னை, பலா போன்ற மரங்களின் கன்றுகளை மீண்டும் அவ்விடத்தில் புதிதாக நட்டு வைக்கப்படும். இதற்கான களப்பணிகளில் என்னுடைய ரசிகர்களும் ஈடுபடுவார்கள். நிவாரண நிதி தேவைப்படுபவர்களை ரசிகர் மன்றத்தின் மூலம் கண்டறிந்து அவர்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் நிவாரண நிதி வழங்கப்படும்'' என விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.