வெளியான பிசாசு 2 அப்டேட்… இயக்குனர் மிஷ்கினுடன் விஜய் சேதுபதி… வைரல் புகைப்படம்!

Webdunia
வியாழன், 26 மே 2022 (13:04 IST)
மிஷ்கின் இயக்கத்தில் அடுத்து உருவாகும் பிசாசு 2 திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

மிஷ்கின்  இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிசாசு 2’ .இந்த படம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் டீசர் வெளியாகி பரவலாக கவனத்தைப் பெற்றது. இந்த படத்தில் ஆண்ட்ரியா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க, பூர்ணா, சந்தோஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி நடித்துள்ள வேடம் ரசிகர்களை வெகுவாகக் கவரும் என சொல்லப்படுகிறது.

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸாகும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் பிசாசு 2 படத்தில் தன்னுடைய காட்சிகளுக்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசி முடித்துள்ளார். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்