முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை

புதன், 18 மே 2022 (22:04 IST)
விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளா விஜய் பட   நடிகை, இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜீவா நடிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் முகமூடி. இப்படத்தில்  ஜீவாவுக்கு  ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. இப்படத்திற்கு பின் தெலுங்கில் பிஷியாகை முன்னணி நடிகையாக வலம் வந்தவர், சமீபத்தில்வெளியான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.

இந்த நிலையில், தெலுங்கில், பூரி ஜெகன் நாதன் இயக்கும் புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இப்படம் பான் இந்தியா படமாக வரும் 2023 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட்3 ஆம் தேதி வெளியாகிறது.

தற்போது, பூரி ஜெகன் நாதன் இயக்கத்தில் லைகர் என்ற படத்தில்  விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்