காத்து வாக்குல ரெண்டு காதல்… புதிய போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (17:03 IST)
விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸடர் வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தைப் பற்றிய முக்கிய அறிவிப்பு காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் படத்தின் புதிய போஸ்டரை இன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி. அந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்