புதிய பரிமாணத்தில் விஜய் சேதுபதி!!

Webdunia
திங்கள், 19 ஜூன் 2017 (18:40 IST)
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற புதிய படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இப்படத்தில் கவுதம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது. 


 
 
படத்தில் விஜய் சேதுபதி பழங்குடியின தலைவராக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதி 8 வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் காட்டுக்குள்ளேயே படமாக்கியுள்ளார்களாம்.


 

 
 பழங்குடியின மக்கள் பின்பற்றும் தனித்துவ சடங்குகளை பற்றி கதை நகர்வதால் விஜய் சேதுபதி பல வேடங்களில் நடிக்க வேண்டியிருந்ததாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். 
 
அடுத்த கட்டுரையில்