50 கோடி ரூபாய் வசூலை அள்ளிய ‘தலைவன் தலைவி’!

vinoth

சனி, 2 ஆகஸ்ட் 2025 (11:05 IST)
தமிழ் சினிமாவில் குடும்பக் கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி ஹிட் கொடுப்பதில் முன்னணியில் இருப்பவர் பாண்டிராஜ்.  அப்படி அவர் இயக்கிய ‘கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ போன்ற படங்கள் இதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள்.

ஆனால் கடைசியாக அவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ‘எதற்கும் துணிந்தவன்’ படம் அவரது டெம்ப்ளேட்டில் இருந்தும் படுதோல்வி அடைந்தது. அந்த படத்தின் தோல்விக்குப் பிறகு 3 ஆண்டுகள் கழித்து அவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘தலைவன் தலைவி’ மிகப்பெரிய வரவேற்புப் பெற்றுள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு, சரவணன் மற்றும் தீபா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் கலக்கி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்