பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட 71 ஆவது தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த நடிகருக்கான விருது இந்த படத்தில் நடித்ததற்காக ஷாருக் கானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நன்றி தெரிவிக்கும் விதமாக பேசியுள்ள ஷாருக் அட்லி சார், மிகவும் நன்றி. எனக்கு இந்த படத்தைக் கொடுத்ததற்கு. நீங்கள் எப்போதும் சொல்வது போல இது மாஸ். என்னுடைய குழுவினருக்கும் நன்றி. மேலும் என் குடும்பத்தினருக்கும் நன்றி. அவர்கள் என்னைக் குழந்தை போல வீட்டில் பார்த்துக் கொள்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.