சூர்யாவுக்கு மட்டும் flop கொடுத்தேனா?... இயக்குனர் பாண்டிராஜ் விளக்கம்!

vinoth

வியாழன், 31 ஜூலை 2025 (09:54 IST)
தமிழ் சினிமாவில் குடும்பக் கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி ஹிட் கொடுப்பதில் முன்னணியில் இருப்பவர் பாண்டிராஜ். கடைசியாக அவர் இயக்கிய எதற்கும் துணிந்தவன் படத்தின் தோல்விக்குப் பிறகு 3 ஆண்டுகள் கழித்து அவர் இயக்கத்தில் வெளியான ‘தலைவன் தலைவி’ மிகப்பெரிய வரவேற்புப் பெற்றுள்ளது.

இந்நிலையில் அவருடைய முந்தைய படமான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் தோல்வி குறித்துப் பேசியுள்ளார். அதில் “எல்லா ஹீரோக்களுக்கும் ஹிட் கொடுத்துவிட்டு சூர்யாவுக்கு மட்டும் ப்ளாப் கொடுத்ததாக சொல்கிறார்கள். எதற்கும் துணிந்தவன் படத்துக்காக கொரோனா காலத்தில் மூன்று ஆண்டுகள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் உழைத்தோம்.

படத்தின் வணிக வெற்றி என்பது நம் கையில் இல்லை. தயாரிப்பாளருக்கும் நடிகருக்கும் அந்த படம் குறித்து மகிழ்ச்சிதான். பெரிதாக வசூல் பண்ணவில்லை என்பது வருத்தம்தான். ஆனால் அதன் பிறகு வந்த எந்த படமும் (சூர்யாவின் படங்கள்) அந்த படம் அளவுக்கு வசூல் செய்யவில்லை. ” எனப் பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்