மகாராஜா படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதிக்கு ஒரு வணிக வெற்றிப்படமாக அமைந்துள்ளது தலைவன் தலைவி. கடந்த வாரம் ரிலீஸான இந்த படம் 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க குணச்சித்திர வேடங்களில் யோகி பாபு, சரவணன், தீபா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸுக்காக பாண்டிராஜ் இயக்கி இருந்தார்.